இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே சமாதான காரணர் !

படம்
“இவரே சமாதான காரணர்” (மீகா 5:5)   The Lord Jesus Christ is the peacemaker நாம் சமாதானமற்ற உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கு பார்த்தாலும் சமாதானக் குறைச்சல் மலிந்துக்கிடக்கின்றது. நாட்டுக்கு நாடு சமாதானமின்மை, சமாதானமற்ற சூழ்நிலைகள் எங்கும் காணப்படுகிறது. சமாதானமின்மை அநேக குடும்பங்களில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சமாதானமின்மை குடும்பங்களில் கணவன், மனைவி, பிள்ளைகள் மத்தியிலுறவைப் பாதிக்கிறது. வெறுப்பு, கசப்பு போன்ற கனிகள் அங்கு காணப்படுகின்றன. தனிமனிதனுடைய வாழ்க்கையிலும் இருதயத்திலும் சமாதானமின்மை ஆளுகை செய்கிறது. மேலலே சொல்லப்பட்ட இந்த வசனத்தை "மீகா தீர்க்கத்தரிசி" , வரப்போகிற மேசியாவான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து இவ்விதம் சொல்லியிருக்கிறார்.  ‘ இவரே   சமாதான   காரணர் ‘  இவரே சமாதானத்தின் ஊற்று, இயேசு கிறிஸ்து இல்லாத இடத்தில் சமாதானம் இருக்காது. இயேசு கிறிஸ்துவின் ஆளுகை இல்லாத இடத்தில் சமாதானம் இருக்காது. அநேகருடைய வீட்டில்  ‘ இயேசு கிறிஸ்துவே   இந்த   வீட்டின்   தலைவர் ‘  என்ற வசனப்பலகை மாட...

இக்காலத்தில் பாடுகள்

படம்
  “இக்காலத்துப் பாடுகள்”( ரோமர் 8 : 18)     இக்காலத்து என்று சொல்லப்படுவது ஒரு குறிக்கபட்ட அல்லது நிர்ணயிக்கப்பட்ட என்று பொருள்படும். அது என்றென்றைக்கும் இருக்கும்படியானவைகள் அல்ல. கிறிஸ்தவ வாழ்க்கையில் பாடுகள் பெரிதான பங்கை வகிக்கின்றன. பாடுகள் இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கையை வேதம் ஒருபோதும் போதிக்கவில்லை. சொல்லப்போனால் உன்னத ஊழியக்காரனாகிய பவுலுக்கும் முள் கொடுக்கப்பட்டிருந்தது.      பொதுவாக பாடுகள் நாம் விரும்பும்படியானவைகள் அல்ல. அதை மனிதர்களாகிய நாம் ஒருபோதும் விரும்புவதும் இல்லை. ஆனால் தேவன் சிறந்த நோக்கத்திற்கென்று ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் அவைகளை இணைத்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு அநேக போலியான போதனைகளில் பாடு இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கை வாக்களிக்கப்படுகிறது. பாடுகளுக்கு உடனடி நிவாரணம் என்று அநேக கள்ளப்போதகர்கள் அழைப்பு விடுக்கிறார்கள். நீ அவர்களால் ஒரு போதும் ஏமாற்றம் அடையாதே.     முதலாவது, பாடுகள் உன்னுடைய வாழ்க்கையில் நீ யார் என்பதை உணரச்செய்கிறது. நீ ஒரு பெலவீன பாண்டம் என்று அறியச் செய்கிறது. ஆம்! பவுல் நம்மை மண்பாண்டம் என்று அழைக்கிறார். ஒ...

Time Using 15 (விடுதலையின் வாழ்வு)

படம்
விடுதலையின் வாழ்வு                     Life of Liberation சங்கீதம் 146:7 அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கட்டப்பட்ட சூழ்நிலையில் உள்ள மனிதர்களை விடுவிக்கிறவராக இருக்கிறார். எவைகளால் கட்டப்பட்டவர்களை கர்த்தர் விடுவிக்கிறார் என்பதை இந்த நாளில் தியானிப்போம்.  1. பாவத்தில் கட்டப்பட்டவர்களை விடுதலையாக்குகிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதனாக இந்த பூமியில் இறங்கி வந்ததே நம்மை பாவத்தில் இருந்து விடுதலை செய்வதற்கே. காலாகாலமாய் பாவத்தில் அடிமைப்பட்டு, பாவத்தின் சங்கிலிகளால் கட்டப்பட்டு இருந்த மனிதர்களுக்கு ஒரு விடியலை அளிக்கவே இயேசு கிறிஸ்து தன்னுடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் சிலுவையில் சிந்தினார். வேதம் சொல்லுகிறது ரோமர் 6:18 பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்  என்று. சத்திய ஆவியாகிய இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசித்து அவரிடம் நம்முடைய பாவங்களை உணர்ந்த...

Time Using 14 (நன்மையானவைகளை தரும் கர்த்தர்)

படம்
நன்மையானவைகளை தரும் கர்த்தர்         "The Lord who gives good things" சில பிள்ளைகள் துப்பாக்கி போன்ற பொம்மையில் தண்ணீரை நிரப்பி மற்றவர்கள் மேல் பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த ஒரு சிறுவன் தன் தந்தையிடம் துப்பாக்கி போன்ற பொம்மை வேண்டும் என்று அழுதான். அவனுடைய தந்தை சாயங்காலம் வாங்கித் தருவதாக வாக்களித்து அவனுடைய அழுகையை நிறுத்தினார். ஆனால் அந்த பொம்மை ஒரு நல்ல விளையாட்டுப் பொருள் அல்ல. அது மற்றவர்களின் உடைகளை அழுக்காக்கும். தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பதால் சளி பிடிக்கலாம். எனவே அதை வாங்காமல் அதைவிட விலை அதிகமானதும், தரமானதுமான ஒரு விளையாட்டுப் பொருளை வாங்கி வந்தார். அவனோ தான் கேட்டதை வாங்கித் தரவில்லையே என்ற கோபத்தில் அந்த நல்ல விளையாட்டுப் பொருளைத் தூக்கி வீசிவிட்டான். சில நேரங்களில் நாம் பிறர் அனுபவிப்பது போன்ற சில நன்மைகளை நாமும் பெற விரும்பி விசுவாசத்தோடு ஜெபிப்போம். ஆனால், நாம் கேட்ட காரியங்கள் கர்த்தரின் பார்வைக்கு நலமாக தோன்றாததால் அவர் அந்த காரியங்களை நமக்கு தருவதில்லை. அவைகளை கர்த்தர் நம்முடைய வாழ்வின் நன்மைக்காகவே தராமல் இருக்க...

Time Using 13 (தீமை துன்மார்க்கனை கொல்லும்)

படம்
தீமை துன்மார்க்கனை கொல்லும்                       Evil kills the wicked ஒரு குறிப்பிட்ட சலவைத் தொழிலாளியின் முன்னேற்றத்தை கண்டு பொறாமை கொண்ட குயவன் ஒருவன் இராஜாவிடம்போய், இராஜாவே நமது நாட்டில் பிரசித்தி பெற்ற சலவைத் தொழிலாளி இருக்கிறார் எனவே நமது யானைகள் ஏன் கறுப்பாக இருக்க வேண்டும்???? அவற்றை வெண்மையாக வெளுத்துத்தர அந்த சலவைத்தொழிலாளியிடம் கூறலாமே என்றான். இராஜாவும் அப்படியே கட்டளை கொடுத்தான். குயவனுக்கு ஒரே ஆனந்தம். சலவைத் தொழிலாளியின் தலை சீவப்படும் நாளை ஆவலோடு எதிர்ப்பார்த்திருந்தான். ஆனால் தந்திரமான சலவைத்தொழிலாளி இராஜாவைப் பார்த்து, இராஜாவே கறுப்பு யானைவை வெண்மையாகச் சலவை செய்வது மிகவும் எளிது. ஆனால் யானையை வைக்கும்படி ஒரு பெரிய உறுதியான மண்பானையை செய்துதரும்படி குயவனுக்குக் கட்டளை கொடுக்க வேண்டும் என்றான். கட்டளை பிறந்தது, இரவுபகலாய் மாபெரும் பானையை குயவன் செய்ய முயன்றான். ஆயினும் யானையின் கால்பட்டதும் நொறுங்கிப்போயின. தன் பொறாமையால் வெட்டிய குழியில் தானே விழுந்த குயவன் இராஜாவால் வெட்டுண்டு மரித்தான். பரிசுத்த வேத...

Time Using 12 (ஒருமனம்)

படம்
ஒருமனம்                            ONE MIND ஒருமனம் என்பது ஒரே சிந்தை அல்லது ஒரே எண்ணம் என்று பொருள்படும். கிறிஸ்தவர்கள் ஒரு மனம் உள்ளவர்களாக காணப்பட வேண்டும் என தேவன் விரும்புகிறார். எவற்றில் எல்லாம் நாம் ஒருமனப்பட்டு இருக்க வேண்டும் என்பதை இந்த நாளில் தியானிப்போம். 1. ஜெபத்தில் ஒருமனம் மத்தேயு 18:19 அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். கர்த்தராகிய   இயேசு கிறிஸ்து நாம் ஒருமித்து ஜெபிக்கும் ஜெபங்களில் ஒருமனம் காணப்பட வேண்டும் என்று விரும்புகிறார். நம்முடைய குடும்ப ஜெபம் அல்லது எந்த ஜெபக்கூடுகையாயினும் அங்கு உள்ளவர்களுக்கு ஜெபிக்கிற காரியங்களில் ஒரே சிந்தை இருந்தால் அவர்கள் வேண்டிக்கொள்ளுவதை கர்த்தர் அருளிச்செய்வார். இன்று நம்முடைய ஜெபத்திற்கு பதில் கிடையாமல் இருப்பதற்கு ஒருமனம் இல்லாமையும் காரணமாக இருக்கலாம். இன்ற...

Time Using 11 (அழிவுக்கு முன்னானது அகந்தை)

படம்
அழிவுக்கு முன்னானது அகந்தை   PRIDE IS BEFORES DESTRUCTION தனது 26 ஆவது வயதில் நெப்போலியன் போனபார்ட் ( Nepolean Bonaparte ) இத்தாலியிலுள்ள பிரஞ்ச் இராணுவத்தின் தளபதியானார். 1804ல் அவர் 35 வயதாவதற்குள், பிரஞ்ச் நாட்டின் அரசனானார். பிரஞ்ச் அதிபர்களுக்கும், கத்தோலிக்க போப்களுக்கும் இடையில், கசப்பான உறவுமுறை இருந்த போதிலும், பிரான்ஸ் அரசாங்க மதமாக கத்தோலிக்க மதமே இருந்து வந்தது. பிரான்ஸ் நாட்டின் முதல் மன்னனாக நெப்போலியன் முடிசூட்டி கொள்வதற்காக போப்பையும் அழைத்திருந்தான். முடிசூட்டும் விழா Notre Dam என்னும் இடத்திலுள்ள பெரிய கதீட்ரலில் (Cathedral) 1804-ல் டிசம்பர் மாதம் 2ம் தேதி நடைபெற்றது. அந்நாளில், போப்பும், அவருடன் கார்டினல்களும், மேலே ஆல்டர் இருக்கும் இடத்தில் காத்திருக்க, நெப்போலியன் தன் மனைவி ஜோஸப்பினின் கைகளைப் பிடித்தபடி நடந்து மேலே ஏறினான். அனைவர் கண்களும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, இப்போது போப்பின் முன் முழங்கால் படியிடுவான் என அனைவரும் எதிர்ப்பார்த்திருக்க, மேலே ஏறிப் போன நெப்போலியன், போப்பின் கையிலிருந்த கிரீடத்தை பிடுங்கி, ஆல்டர் இருக்கும் இடத்திற்...

Time Using 10 (வாலிபத்திலே சிருஷ்டிகரை நினை)

படம்
வாலிபத்திலே சிருஷ்டிகரை நினை  < Remember the Creator God in the youth> பிரசங்கி 12:7 இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.          ஒரு சுவிசேஷகர் உல்லாசமாய் தன் வாழ்வை நடத்தி கொண்டிருந்த ஒரு வாலிபனிடம் போய், 'நீ மனம் திரும்பி இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்று கொள். அவரே உன் மரணத்திற்குப்பின் நித்திய வாழ்வை தருவார்' என சுவிசேஷத்தை அறிவித்தார். அதற்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா? 'வாலிபம் வாழ்வதற்கே, நான் வயதானபின் ஆண்டவரை ஏற்று கொள்வேன்' என்றான்.           ஆம்; உலக மக்கள் இப்படித்தான் எண்ணி கொள்கிறார்கள். 'வயதானப்பின் கோவில் குளம் என்று சுத்து' என்பதுதான் நம் நாட்டவரின் சகஜ பேச்சு. எனக்கு தெரிந்த 80 வயதான ஒருவர், நடக்கவே முடியாத நிலை, உடலில் வேறு வியாதிகள், ஆனால் ஒவ்வொரு வருடமும் சபரி மலைக்கு 18 படிகள் ஏறிவிட்டு வருவார். அவரின் வாலிப நாட்களில் செய்யாததை இப்போது உடலில் எல்லாம் ஒடுங்கி விட்ட...

Time Using 09 ( சீலோவாம் )

படம்
சீலோவாம்                                Siloam சீலோவாம் என்ற குளத்தில் சென்று கண்களை கழுவி பார்வையடைந்த மனிதனின் சம்பவத்தை நாம் எல்லோரும் அறிவோம். இந்த சீலோவாம் குளத்தின் மூலம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கற்றுத்தரும் காரியங்களை இந்த நாளில் தியானிப்போம்.  1. அனுப்பப்பட்ட சீலோவாம் யோவான் 9:7 நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான்.      சீலோவாம் என்றால் அனுப்பப்பட்டவன் என்று பொருள்படும் . அந்த அனுப்பப்பட்ட சீலோவாமில் சென்று கண்களை கழுவிய குருடன் சுகம் பெற்றான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மக்களை ஆண்டவர் இந்த உலகத்தில் அனுப்புவதாக கூறி உள்ளார். ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புவது போல ஆண்டவர் நம் எல்லாரையும் சுவிசேஷத்தை அறிவிக்க அனுப்பி உள்ளார் என்று வேதம் கூறுகிறது. லூக்கா 10:3 புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக...

Time Using 08 ( இளைப்பாறுதல் தரும் தேவன் )

படம்
இளைப்பாறுதல் தரும் தேவன்       இளைப்பாறுதல் தரும் தேவன் இளைப்பாறுதல் என்றால் ஆங்கிலத்தில் Rest அல்லது தமிழில் ஓய்வு என்று பொருள்படும். இளைப்பாறுதல் இல்லாமல் இன்று அநேகர் சமாதானமின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இளைப்பாறுதல் தரவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதனாக இந்த உலகத்தில் வந்தார். இந்த இளைப்பாறுதல் குறித்து வேதம் நமக்கு கற்றுத்தரும் காரியங்களை இந்த நாளில் தியானிப்போம்.  1. இயேசுவிடம் நாம் வரும்போது இளைப்பாறுதல் எரேமியா 6:16 வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்...... முதலாவது பார்த்தால் நாம் நல்ல வழி எது என்று பார்த்து அதில் நடந்தால் நம்முடைய ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று எரேமியா தீர்க்கதரிசி கூறுகிறார். நல்ல வழி என்றால் என்ன?????? இயேசு சொன்னார் நானே வழி என்று. யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில...

Time Using 07 ( நன்மையை அருளும் தேவன் )

படம்
நன்மையை அருளும் தேவன்       நன்மையை அருளும் தேவன் நன்மைகள் அல்லது ஆசீர்வாதங்கள் நம்முடைய பிதாவிடம் இருந்தே இறங்கி வருகிறது. இயேசு கிறிஸ்து  யார் யாருக்கெல்லாம் நன்மைகளை அளிக்கிறார் என்பதை இந்த நாளில் தியானிப்போம்.  1. தம்மை தேடுகிறவர்களுக்கு நன்மை அளிக்கிறார் சங்கீதம் 34:10 சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது. ஆண்டவராகிய தேவன் தம்மை தேடும் தம்முடைய பிள்ளைகளுக்கு நன்மைகளை வழங்குகிறார். சங்கீதக்காரன் கூறியது போல காட்டிற்கு இராஜாவாகிய சிங்கத்தின் குட்டிகளே பட்டினியடையலாம். ஆனால் இராஜாதி இராஜா இயேசு கிறிஸ்துவை தேடுபவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. தானியேலின் வாழ்க்கையில் பார்த்தால் அவன் அந்தி, சந்தி, மத்தியான வேளைகளில் ஆண்டவரை தேடினதின் நிமித்தம் சிங்கக்கெபியில் போடப்பட்டான். ஆனால்,  ஆண்டவர் அற்புதமாக தானியேலை சிங்கங்களின் வாய்க்கு தப்புவித்து எல்லாருக்கும் முன்பாக உயர்த்தினார். ஆண்டவரை நாம் முழு மனதோடு தேட வேண்டும். அவர் வார்த்தைகளை தியானிக்க வேண்டும். அவ்வாறு ஆண்டவர...

Time Using 06 ( ஆவியில் எளிமை )

படம்
ஆவியில் எளிமை                       Simplicity in Spirit மத்தேயு 5:3 ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. இவ்வுலகில் அநேகர் பணம், பொருள் ஆகியவற்றை மிகுதியாக சம்பாதித்து மிகப்பெரிய ஐசுவரியவானாய் வாழ விரும்புகின்றனர். ஐசுவரியவானாய் வாழ்ந்தாலும், தரித்திரனாய் வாழ்ந்தாலும் ஆவியில் எளிமை இருந்தால் மட்டுமே பரலோக இராஜ்யத்தை சுதந்தரிக்க முடியும் என்று இயேசு கிறிஸ்து தன்னுடைய மலைப்பிரசங்கத்தில் கூறியுள்ளார். வேதத்தில் கூறப்பட்டுள்ள சில ஆவியில் எளிமையுள்ளவர்களை இந்த நாளில் தியானிப்போம். 1. ஆவியில் எளிமையுள்ள ஆயக்காரன் ஆயக்காரன், பரிசேயன் உவமையில் இருவருமே ஜெபம் செய்வதற்கு ஆலயம் செல்கின்றனர். பரிசேயனோ உபவாசிக்கிறவனாயும், தசம பாகம் செலுத்துகிறவனாயும் காணப்பட்டும் அவனிடம் ஆவிக்குரிய எளிமை இல்லாத காரணத்தால் மற்றவர்களை அற்பமாக எண்ணினான். ஆனால் ஆயக்காரன் ஆவியில் எளிமை கொண்டிருந்ததால் கர்த்தரை நோக்கி தன்னை தாழ்த்தி ஜெபித்தான். ஆவியில் எளிமையுள்ள ஆயக்காரன் நீதிமானாக்கப்பட்டான் என்று பார்க்கிறோம்.  லூக்...

Time Using 05 ( வேலையில் உண்மை )

படம்
வேலையில் உண்மை                          True at work கொலோசெயர் 3:24 எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். குறிப்பிட்ட கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு மிகக்குறைவான சம்பளமே வழங்கப்பட்டது. அதிக சம்பளம் வழங்கினாலும் யாரும் நேர்மையாக உழைக்கவில்லை என்பது அந்த கம்பெனி முதலாளியின் எண்ணம். ஒரு முறை அங்கு சாதாரண சம்பளத்தில் வேலை பார்க்கும் ஒருவர் தன்னுடைய சம்பளத்தை பார்க்காமல் தன்னுடைய முழு பலத்தையும் உபயோகித்து தன்னுடைய பணியில் நேர்மையாக இருந்து வந்தார்.  அவருடைய கடின உழைப்பைக் கண்ட மற்ற தொழிலாளர்கள் வீணாக அப்படி உழைக்காதே நீ எவ்வளவு வேலை செய்தாலும் அதற்கேற்ற சம்பளம் கிடைக்கப்போவது இல்லை எனவே உன்னை வருத்திக்கொள்ளதே என்று கடிந்து கொண்டனர். அதற்கு அந்த மனிதன் நான் இந்த முதலாளியிடம் நல்ல சம்பளம் எதிர்பார்த்து உழைக்கவில்லை. என்னுடைய பரம முதலாளியாகிய தேவன் எனக்கு நியாயம் செய்வார் என பதில் கூறினானாம்.  இன்றும் அநேக மேலதிகாரிகள் நன்மைக்கு அல்லாமல...

Time Using 4 ( நம்மை பராமரிக்கும் ஆண்டவர் )

படம்
நம்மை பராமரிக்கும் ஆண்டவர்                Jesus Christ Cares You யோபு 10:12 எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது.         அமெரிக்க தேசத்திலே ஒரு பெரிய தொழிலதிபர் இருந்தார். நன்றாக நடந்து கொண்டிருந்த தொழிலில் திடீரென்று மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார் அவர்.            மிகப்பெரிய பணநெருக்கடியில் அவர் இருந்ததால், அவரது நண்பர்கள் மட்டுமல்ல; அவரது மனைவியும்கூட அவரை விட்டுப் பிரிந்து சென்று விட்டாள்.            அந்த கவலையின் நேரத்தில் அவரை ஆறுதல்படுத்த யாருமே இல்லை. எல்லோரும் அவரை தனியாக விட்டு சென்றுவிட்டனர்.            அந்தக் கஷ்டத்தின் மத்தியில் ஒரு கொடிய வியாதி அவரைத் தாக்கி பலவீனப்படுத்தியது. அவருடைய இரண்டு நுரையீரல்களும் பழுதடைந்துவிட்டன. அந்த வியாதியோடு அவர் போராடிக் கொண்டிருந்த அந்த சூழ்நிலையில் அவருடைய பழைய நண்பர் ஒருவர் மருத்துவமனை ஒன்றில் அவரை சேர்த்துவிட்டு செ...

Time Using 03 ( அடைக்கலான் குருவிகள் )

படம்
அடைக்கலான் குருவிகள் The Sparrows அடைக்கலான் குருவிகள் இன்றைய நாளில் அழிந்து கொண்டிருக்கும் இனமாக உள்ளது. மாறிப்போன வாழ்க்கை முறையின் காரணமாக குருவி இனங்களை பாதுகாக்க மனிதர்கள் தவறி விட்டனர். எங்கள் வீட்டின் முன்பகுதியில் இந்த குருவிகள் கூடு அமைத்து இருந்தன. சில வேளைகளில் அவை எங்கள் வீட்டிற்குள் புகுந்து பின்பு வெளியே செல்ல முடியாமல் தவிக்கும். அவைகளை எடுத்து கூட்டில் வைத்து அடைக்கலம் கொடுத்தோம். இந்த அடைக்கலான் குருவிகளைக் குறித்து வேதம் கூறும் காரியங்களை தியானிப்போம்.  1. மதிப்பில்லாத குருவிகள் லூக்கா 12:6 இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுவதில்லை. அடைக்கலான் குருவிகள் அந்த நாட்களில் மக்களால் ஒரு விலை மதிப்பில்லாத பறவையாக காணப்பட்டது. இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்றார்கள். ஆனால் அவ்வாறு உலக மக்களால் மதிக்கப்படாத ஒரு குருவியை குறித்து தேவன் கூறும் காரியங்களை பாருங்கள். அவைகளில் ஒன்றும் மறக்கப்படுவதில்லை என்று. ஆம் நம் கர்த்தர் நம்மை மறந்து விடுகிற தேவன் அல்ல. உலகத்தாரின் பார்வையில் நாம் ஒன்றுக்கும்...

Time Using 02 ( விசுவாசமுள்ள ஜெபம் )

படம்
விசுவாசமுள்ள ஜெபம் Succes in Jesus Christ   மாற்கு 11:24 ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். ஒரு சமயம் நாத்திகன் ஒருவன் மதுபானக் கடை ஒன்றை முதலாவதாக பட்டணத்தில் திறக்க அனுமதி பெற்றிருந்தான்.அந்தக்கடை அந்த பட்டணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் இருக்கபோகிறபடியால் அந்த ஆலய விசுவாசிகள் அதை விரும்பவில்லை. விசுவாசிகள் எல்லாரும் அந்த மதுக்கடை இல்லாமல் போகும்படி தேவனிடத்தில் ஜெபித்தார்கள். அந்தக்கடை திறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர்கள் ஜெபித்தபடி மின்னல் தாக்கி அந்த கடை எரிந்து தரைமட்டமானது. விசுவாசிகள் எல்லோருக்கும் மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. ஆனால் அந்த மதுபானக்கடை உரிமையாளரோ இந்த விசுவாசிகள் ஜெபித்ததின் விளைவாகத்தான் அவருடைய கடைக்கு இவ்விதம் சம்பவித்தது என்று விசுவாசித்து ஜெபித்த கிறிஸ்தவர்களை நீதிமன்றத்திற்கு இழுத்தார். விசுவாசிகளோ, தங்களுக்கும் கடை எரிந்து சாம்பலானதற்கும் எந்த தொடர்பும் இல்லை என வாதிட்டார்கள். முதல் வாய்தாவிலே நீதிபதி இ...

Time Using 01 ( நன்மை செய்யப்படியுங்கள் )

படம்
நன்மை செய்யப்படியுங்கள்             Read on to do good யாக்கோபு 4:17 ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும் . ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார். ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது. தன் கையிலிருந்தவற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடினார் ஃப்ளமிங். ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் அந்தப் புதை மணலில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான். நல்லவேளையாக ஃப்ளமிங் அவனை காப்பாற்றினார். ஃப்ளமிங் இல்லையென்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான். அடுத்த நாள் ஒரு ஆடம்பரமான வண்டி ஃப்ளமிங் வீட்டு முன்னால் வந்து நின்றது. நேர்த்தியாக உடை அணிந்த ஒரு பிரபு அவ்வண்டியிலிருந்து இறங்கி வந்து நேற்று ஃப்ளமிங் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தாம் என்று அறிமுகம் செய்து கொண்டார். “நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிற...