Resurrection Sunday - உயிர்த்தெழுந்தார் இயேசு கிறிஸ்து
உயிர்த்தெழுந்தார் இயேசு கிறிஸ்து. லூக்கா 24:6 அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் உயிர்ப்பு ஞாயிறு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். உயிர்த்தெழுந்த இயேசு தரும் சமாதானம் நம் அனைவரையும் ஆட்கொள்வதாக. இந்த நாளிலும் இயேசு எதற்காக உயிர்த்தெழுந்தார் என்பதைக் குறித்து தியானிப்போம். 1. நாம் நீதிமான்களாவதற்கு அவர் உயிர்த்தெழுந்தார். ரோமர் 4:25 அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். இயேசுவின் உயிர்த்தெழுதல் நடைபெற்று இருக்காவிட்டால் நாம் நம்முடைய பாவங்களிலே இருந்திருப்போம். அவர் நமக்காக உயிர்தெழுந்ததால் நம் பாவங்கள் கழுவப்பட்டு, இரட்சிப்பை பெற்று, நீதிமான்களாக்கப்படுகிறோம் என்பதை வேதம் நமக்கு கற்றுத்தருகிறது. I கொரிந்தியர் 15:17 கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள். இன்னும் பாவத்தோடு இருக்கிறீர்களா?? இயேசுவின் உயிர்த்தெழுதலை நினைவு கூறும் நாளில் அவரிடம் திரும்பி வருவோம். உயிர்த்தெழுந்த இயேசு நம்முடைய...