இக்காலத்தில் பாடுகள்
“இக்காலத்துப் பாடுகள்”( ரோமர் 8 : 18) இக்காலத்து என்று சொல்லப்படுவது ஒரு குறிக்கபட்ட அல்லது நிர்ணயிக்கப்பட்ட என்று பொருள்படும். அது என்றென்றைக்கும் இருக்கும்படியானவைகள் அல்ல. கிறிஸ்தவ வாழ்க்கையில் பாடுகள் பெரிதான பங்கை வகிக்கின்றன. பாடுகள் இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கையை வேதம் ஒருபோதும் போதிக்கவில்லை. சொல்லப்போனால் உன்னத ஊழியக்காரனாகிய பவுலுக்கும் முள் கொடுக்கப்பட்டிருந்தது. பொதுவாக பாடுகள் நாம் விரும்பும்படியானவைகள் அல்ல. அதை மனிதர்களாகிய நாம் ஒருபோதும் விரும்புவதும் இல்லை. ஆனால் தேவன் சிறந்த நோக்கத்திற்கென்று ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் அவைகளை இணைத்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு அநேக போலியான போதனைகளில் பாடு இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கை வாக்களிக்கப்படுகிறது. பாடுகளுக்கு உடனடி நிவாரணம் என்று அநேக கள்ளப்போதகர்கள் அழைப்பு விடுக்கிறார்கள். நீ அவர்களால் ஒரு போதும் ஏமாற்றம் அடையாதே. முதலாவது, பாடுகள் உன்னுடைய வாழ்க்கையில் நீ யார் என்பதை உணரச்செய்கிறது. நீ ஒரு பெலவீன பாண்டம் என்று அறியச் செய்கிறது. ஆம்! பவுல் நம்மை மண்பாண்டம் என்று அழைக்கிறார். ஒ...