வழி காட்டும் தேவன்...
கிறிஸ்துமஸ் காலங்களில் இருக்கும் நாம் ஆண்டவரின் பிறப்பைக்குறித்து பல காரியங்களை கேட்டு வருகிறோம். ஆண்டவரின் பிறப்பை உலகிற்கு தெரியப்படுத்த ஆண்டவர் பலவற்றை உபயோகப்படுத்தினார். அவ்வாறு ஆண்டவரின் பிறப்பை வழிகாட்ட பயன்படுத்தப்பட்ட காரியங்களைக் குறித்து இந்த நாளில் நாம் தியானிப்போம். 1. நட்சத்திரத்தின் மூலம் வழிகாட்டிய தேவன் மத்தேயு 2:1,2 ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ளவந்தோம் என்றார்கள். இயேசு பிறப்பை சாஸ்திரிகள் கண்டுகொள்ள வழி காட்டியது அந்த கிழக்கில் தோன்றிய நட்சத்திரமே. அது சரியான பாதையில் அவர்கள் செல்லவும். கிறிஸ்துவை கண்டு கொள்ளவும் வழிவகை செய்தது. நட்சத்திரத்தை பின்பற்றி வந்தவர்கள் மேசியா ராஜ அரண்மனையில் பிறப்பார் என்ற நம்பிக்கையில் ஏரோதிடம் சென்று விசாரித்தார்கள். ஆனால் அங்கு நடந்ததே வேறு. நட்சத்திரத்தை மீண்டும் கண்ட அவர்கள் ஆனந்த சந்தோஷமடைந்து பிள்ளை இருக்கும் இடத்தை கண்டடைந்த...