Time Using 05 ( வேலையில் உண்மை )
வேலையில் உண்மை True at work கொலோசெயர் 3:24 எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். குறிப்பிட்ட கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு மிகக்குறைவான சம்பளமே வழங்கப்பட்டது. அதிக சம்பளம் வழங்கினாலும் யாரும் நேர்மையாக உழைக்கவில்லை என்பது அந்த கம்பெனி முதலாளியின் எண்ணம். ஒரு முறை அங்கு சாதாரண சம்பளத்தில் வேலை பார்க்கும் ஒருவர் தன்னுடைய சம்பளத்தை பார்க்காமல் தன்னுடைய முழு பலத்தையும் உபயோகித்து தன்னுடைய பணியில் நேர்மையாக இருந்து வந்தார். அவருடைய கடின உழைப்பைக் கண்ட மற்ற தொழிலாளர்கள் வீணாக அப்படி உழைக்காதே நீ எவ்வளவு வேலை செய்தாலும் அதற்கேற்ற சம்பளம் கிடைக்கப்போவது இல்லை எனவே உன்னை வருத்திக்கொள்ளதே என்று கடிந்து கொண்டனர். அதற்கு அந்த மனிதன் நான் இந்த முதலாளியிடம் நல்ல சம்பளம் எதிர்பார்த்து உழைக்கவில்லை. என்னுடைய பரம முதலாளியாகிய தேவன் எனக்கு நியாயம் செய்வார் என பதில் கூறினானாம். இன்றும் அநேக மேலதிகாரிகள் நன்மைக்கு அல்லாமல...