இடுகைகள்

2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இம்மானுவேல் - தேவன் நம்மோடு

படம்
இம்மானுவேல் - தேவன் நம்மோடு அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். (மத்தேயு 1:23) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு இம்மானுவேல் என்ற வேறொரு பெயரும் உண்டு. இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தம். இம்மானுவேலாகிய அவர் நம்மோடு எப்படி எல்லாம் இருக்கிறார் என்பதை இந்த நாளில் தியானிப்போம்.  1. சோதனைகளில் இம்மானுவேல் நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது. (ஏசாயா 43:2) முதலாவது ஆண்டவர் நம்முடைய சோதனைகளில் எல்லாம் நம்மோடு இருந்து நம்மை விடுவிக்கிறார். மேற்கூறிய வசனத்தில் பார்த்தால் தண்ணீர்களை கடக்கும்போது நான் கூடவே இருப்பேன் என்று கூறுகிறார். தண்ணீர்கள் போன்ற சோதனைகள் நமது வாழ்க்கையில் வராமல் போவதில்லை. ஆனால் அந்த தண்ணீர்களின் நடுவிலும் கர்த்தருடைய கரம் நம்மை நடத்தும் என்பதை ம...

Resurrection Sunday - உயிர்த்தெழுந்தார் இயேசு கிறிஸ்து

படம்
உயிர்த்தெழுந்தார் இயேசு கிறிஸ்து. லூக்கா 24:6 அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் உயிர்ப்பு ஞாயிறு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். உயிர்த்தெழுந்த இயேசு தரும் சமாதானம் நம் அனைவரையும் ஆட்கொள்வதாக. இந்த நாளிலும் இயேசு எதற்காக உயிர்த்தெழுந்தார் என்பதைக் குறித்து தியானிப்போம். 1. நாம் நீதிமான்களாவதற்கு அவர் உயிர்த்தெழுந்தார். ரோமர் 4:25 அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். இயேசுவின் உயிர்த்தெழுதல் நடைபெற்று இருக்காவிட்டால் நாம் நம்முடைய பாவங்களிலே இருந்திருப்போம். அவர் நமக்காக உயிர்தெழுந்ததால் நம் பாவங்கள் கழுவப்பட்டு, இரட்சிப்பை பெற்று, நீதிமான்களாக்கப்படுகிறோம் என்பதை வேதம் நமக்கு கற்றுத்தருகிறது. I கொரிந்தியர் 15:17 கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.  இன்னும் பாவத்தோடு இருக்கிறீர்களா?? இயேசுவின் உயிர்த்தெழுதலை நினைவு கூறும் நாளில் அவரிடம் திரும்பி வருவோம். உயிர்த்தெழுந்த இயேசு நம்முடைய...

Good Friday - சிலுவையை சுற்றி கேட்ட ஏழு குரல்கள்

படம்
சிலுவையை சுற்றி கேட்ட ஏழு குரல்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக இந்த மண்ணில் இறங்கிவந்து சிலுவைப்பாடுகளை ஏற்றுக்கொண்டார். பெரிய வெள்ளியாகிய இன்று இயேசு சிலுவையில் பேசிய ஏழு வார்த்தைகளை குறித்து நாம் அனைவரும் பல செய்திகளை கேட்கிறோம். ஆனால் இயேசுவின் சிலுவையை சுற்றி பலவித குரல்களும் கேட்டது. பல மக்களும் பேசினதாக கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இயேசுவின் சிலுவையை சுற்றி கேட்ட ஏழு குரல்கள் என்ற தலைப்பில் இன்று தியானிக்க இருக்கிறோம்.  சிலுவையை சுற்றி கேட்ட ஏழு குரல்கள் 1. பரியாசத்தின் குரல் அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே இரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள். (மத்தேயு 27:39,40) இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது அந்த வழியாக நடந்து சென்றவர்கள் இயேசுவை தூஷித்தார்கள். அதேபோல வேதபாரகர், பரிசேயர் மற்றும் மூப்பர்களும் அவரை பரியாசம் பண்ணினார்கள் என்று பார்க்கிறோம். இயேசுவின் சிலுவை மரணம் அவர்களுக்கு ஒரு பரியாசமாய் தோன்றியது. வேதம் சொல்லுகிறது பரியாசக்கா...