இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மீட்பரின் மகத்துவங்கள்

படம்
ஏசாயா 47:4 எங்கள் மீட்பருடைய நாமம் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய சேனைகளுடைய கர்த்தர் என்பது. மீட்பர் என்றால் மீட்டு இரட்சிப்பவர் என்று பொருள்படும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும் மீட்கும் மீட்பராக இந்த மண்ணில் இறங்கி வந்தார். நம்முடைய தேவனாகிய மீட்பருடைய மகத்துவங்களைக் குறித்து இந்த நாளில் தியானிப்போம்.  1. மீட்பர் வல்லமையுள்ளவர் எரேமியா 50:34 அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர், சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; தேசத்தை இளைப்பாறப் பண்ணுவதற்கும், பாபிலோன் குடிகளைத் தத்தளிக்கப்பண்ணுவதற்கும் அவர்களுடைய வழக்கை அவர் நடத்துவார். முதலாவது நம்முடைய மீட்பர் வல்லமையுள்ளவர். நமக்கு எதிராய் எத்தனை விதமான போராட்டமான சூழ்நிலை வந்தாலும் நம்மை விடுவிக்க அவர் வல்லமையுள்ளவராக இருக்கிறார். தலைக்கு மேலே பிரச்சனை சென்றாலும், கோலியாத் போன்ற பலசாலிகள் நமக்கு எதிராய் வந்தாலும் ஆண்டவர் பராக்கிரமமுள்ளவர் என்பதை நாம் மறந்துபோகக் கூடாது. தாவீதை விட கோலியாத் சரீரப்பிரகாரமாக பார்த்தால் பலமுள்ளவன் தான். ஆனால் தாவீதின் மீட்பர் வல்லமையுள்ளவராக இருந்ததால் கோலியாத்தை எளித...