Time Using 05 ( வேலையில் உண்மை )
வேலையில் உண்மை
கொலோசெயர் 3:24 எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.
குறிப்பிட்ட கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு மிகக்குறைவான சம்பளமே வழங்கப்பட்டது. அதிக சம்பளம் வழங்கினாலும் யாரும் நேர்மையாக உழைக்கவில்லை என்பது அந்த கம்பெனி முதலாளியின் எண்ணம். ஒரு முறை அங்கு சாதாரண சம்பளத்தில் வேலை பார்க்கும் ஒருவர் தன்னுடைய சம்பளத்தை பார்க்காமல் தன்னுடைய முழு பலத்தையும் உபயோகித்து தன்னுடைய பணியில் நேர்மையாக இருந்து வந்தார்.
அவருடைய கடின உழைப்பைக் கண்ட மற்ற தொழிலாளர்கள் வீணாக அப்படி உழைக்காதே நீ எவ்வளவு வேலை செய்தாலும் அதற்கேற்ற சம்பளம் கிடைக்கப்போவது இல்லை எனவே உன்னை வருத்திக்கொள்ளதே என்று கடிந்து கொண்டனர். அதற்கு அந்த மனிதன் நான் இந்த முதலாளியிடம் நல்ல சம்பளம் எதிர்பார்த்து உழைக்கவில்லை. என்னுடைய பரம முதலாளியாகிய தேவன் எனக்கு நியாயம் செய்வார் என பதில் கூறினானாம்.
இன்றும் அநேக மேலதிகாரிகள் நன்மைக்கு அல்லாமல் தீமைக்கே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும் என வேதம் கூறுகிறது. ரோமர் 13:3 மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும். ஒரு வேளை நாம் செய்யும் வேலையை யாரும் பார்க்காமல், அதற்கு தகுந்த சம்பளம் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் பரலோகத்தில் பார்க்கிற பிதா வெளியரங்கமாய் சீக்கிரமே பதில் செய்வார். வேதம் சொல்லுகிறது கொலோசெயர் 3:23 நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று.
பிரியமானவர்களே நாமும் உண்மையோடும் உத்தமத்தோடும் செய்யும் வேலையை யாரும் மதிக்காமல் அதை உதாசீனப்படுத்திக்கொண்டு இருக்கலாம். ஆனால் நாம் மனிதர்கள் காணும்படி செய்யாமல் கர்த்தருக்கென்று உத்தமமாக செய்வோம் அவர் நம்மை ஆசீர்வதிப்பார். அது எந்த வேலையாயினும் வேலையின் தரத்தை அல்ல நமது உண்மையைத் தான் கர்த்தர் பார்க்கிறார்.
ரோமர் 13:1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.
Glory to Jesus Christ
கருத்துகள்
கருத்துரையிடுக