இம்மானுவேல் - தேவன் நம்மோடு
இம்மானுவேல் - தேவன் நம்மோடு அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். (மத்தேயு 1:23) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு இம்மானுவேல் என்ற வேறொரு பெயரும் உண்டு. இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தம். இம்மானுவேலாகிய அவர் நம்மோடு எப்படி எல்லாம் இருக்கிறார் என்பதை இந்த நாளில் தியானிப்போம். 1. சோதனைகளில் இம்மானுவேல் நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது. (ஏசாயா 43:2) முதலாவது ஆண்டவர் நம்முடைய சோதனைகளில் எல்லாம் நம்மோடு இருந்து நம்மை விடுவிக்கிறார். மேற்கூறிய வசனத்தில் பார்த்தால் தண்ணீர்களை கடக்கும்போது நான் கூடவே இருப்பேன் என்று கூறுகிறார். தண்ணீர்கள் போன்ற சோதனைகள் நமது வாழ்க்கையில் வராமல் போவதில்லை. ஆனால் அந்த தண்ணீர்களின் நடுவிலும் கர்த்தருடைய கரம் நம்மை நடத்தும் என்பதை ம...