விசுவாசம்
மத்தேயு 21:22 மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமயிருக்கிறது . அந்த விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்றும் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் என்றும் அநேக இடங்களில் வேதத்தில் காணலாம். வேதத்தில் அநேக பரிசுத்தவான்களின் விசுவாச வாழ்க்கை நமக்கு முன்மாதிரியாக தரப்பட்டுள்ளது. அவைகளைக் குறித்து இன்று தியானிப்போம். 1. இயற்கைக்கு அப்பாற்பட்ட விசுவாசம் விசுவாசம் என்று கேட்டவுடனே ஞாபகம் வருவது ஆபிரகாம். அவன் விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்பட்டான். ஆபிரகாமுக்கு பிள்ளை இல்லாதிருந்த போது கர்த்தர் அவனுக்கு தரிசனமாகி உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களை போல பெருகப் பண்ணுவேன் என்று வாக்குப்பண்ணுகிறார். ஆதியாகமம் 15:5,6 அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார். *அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்க...